Posts

கனமழை எதிரொலி- உயரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்-விவசாயிகள் மகிழ்ச்சி.

Image
ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அருகே,பவானிசாகர்அணைஉள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய மண் அணை ஆகும். மேலும், தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைகளில், இதுவும் ஒன்றாகும்.இந்தஅணையில்இருந்து, வெளியேற்றப்படும் நீர் ஈரோடு, திருப்பூர் கரூர் மாவட்ட மக்களுக்கு, குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயன்பட்டு வருகிறது. இங்கு  முறையே, அரக்கன் கோட்டை, தடபள்ளி வாய்க்கால் மற்றும் காலிங் கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்கால் மூலம்,விவசாயநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு, பவானி ஆறு மூலம் வரும் நீர்,பில்லூர் அணையில் சேமிக்கப்பட்டு,உபரிநீர் இந்த அணைக்கு வரும். மேலும், மேயாறு மூலமும் நீர்வரத்து வருகிறது.கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணை, நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக,பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து, அதிகரித்த வண்ணம் உள்ளது.  பவானிசாகர் அணையின் மொத்த முழுகொள்ளளவான105அடிக்கு,  அணையின் நீர் மட்டம் தற்போது இன்று காலை 10 மணி நிலவரப்படி, 52.65 அடி உயரம் உள்ளது.தற்போது அணையி...

தொடர் கேடு விளைவிக்கும் திருக்காஞ்சி நித்யா பேக்கேஜ் தொழிற்சாலையை மூடவேண்டும் இல்லையேல் போராட்டம் ஆர்.எல்.வி பேரவை மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ அறிக்கை

Image
மனித இனத்திற்க்கே கேடு விளைவிக்கும் திருக்காஞ்சி நித்யா பேக்கேஜ்  தொழிற்சாலையை மூடவேண்டும்  இல்லையேல் நிறுவனத்தலைவர் ஆர்.எல் வெங்கட்டாராமன் அனுமதியுடன் போராட்டம் நடத்துவோம் ஆர்.எல்.வி பேரவை மாநில பொதுச்செயலாளர் மாஸ்கோ அறிக்கை  புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஒதியம் பட்டு திருக்காஞ்சி ரோட்டில் நித்யா பேக்கேஜ் லிமிட்டெட் கம்பனி உள்ளது. இந்த கம்பனியில் இருந்து வெளியேற்றக்கூடிய நச்சுப்புகை மற்றும் நச்சுக்கழிவுகள் , சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. கம்பெனியை சுற்றி 20 கிராமங்களுக்கு மேல் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் கம்பெனியிலிருந்து வெளிவரக்கூடிய நச்சுப்புகையினாலும் நச்சுக்கழிவுகளாலும் சுகாதார சீர்க்கேட்டால் அவதிப்படுகின்றனர். இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் , டிபி ,ஆஸ்த்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பகல் முழுக்க கூலி வேலை செய்துவிட்டு நிம்மதியாக தூங்க வீட்டுக்கு வந்தால் , அவர்களை, இந்த தொழிற்சாலையின் நச்சு புகையினால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இந்த மூச்சு திணறல் ஏற்பட்டு நிறையபேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அதுமட...

மழை வெள்ளத்தில் பாப்பாங்குட்டை மக்கள் பாதிப்பு... பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி

Image
  நம்பியூர் அருகே எம்மாம் பூண்டி பாப்பாங் குட்டையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அவர்களை பாதுகாப்பாக குப்பி பாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைத்து உணவு ஏற்பாடு சிறப்பாக செய்து கொடுத்தார் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி  வருவாய் வட்டாட்சியர் மாலதி நில வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி  கிராம நிர்வாக அலுவலர் சுமதி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் பெரியகுளம் கனமழையால் நிரம்பி வருவதை பொதுமக்களுடன் பார்வையிட்ட பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி.சண்முகம்

Image
  ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் பெரியகுளம் கனமழையால் நிரம்பி வருவதை பொதுமக்களுடன் பார்வையிட்ட பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி.சண்முகம். நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பின, அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு  இச்சிபாளையம் மற்றும் கெடாரை, சந்தன நகர் பகுதியில் பெய்த கனமழையால் குளங்கள் முழுமையாக நிரம்பி மழைநீர்  வெளியேறி நம்பியூர் அருகே உள்ளஎலத்தூர் பெரியகுளம் 25 ஆண்டுக்கு பிறகு நிரம்பி வருகிறது.இந்த பெரியகுளம் ஆனது 100 ஏக்கர் 77 சென்டில் உள்ளது.எலத்தூர்,கண்ணாங் காட்டு பாளையம், கரட்டுப்பாளையம்,செட்டிபாளையம்,பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் உள்ளது.குளம்முழுமையாக நிரம்பி நீர்வழி பாதையில் வெளியேறும் அதனால் அப்பகுதி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் ஆலோசனையின் படி எலத்தூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி சண்முகம்,பொதுமக்களுடன் பார்வையிட்டு ஆக்கிரம...

சத்தியமங்கலம் அடுத்த பெரும்பள்ளம் அணை நீர்தேக்க பகுதியில், உயிருக்கு போராடிய ஆண் யானை சிகிச்சை பலனின்றி மரணம்.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில், பெரும்பள்ளம் நீர் தேக்க அணை உள்ளது. இந்த பகுதியில், கடந்த பத்து நாட்களாக, 30 வயது மதிக்க மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, உடல்நலம் குன்றிய நிலையில் அந்த பகுதியிலேயே, நடமாடி வந்துள்ளது. அங்குள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து, பயிர்களை மேய்வதும், நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் அருந்தியும் நடமாடி வந்துள்ளது. மேலும் அங்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற கால்நடைகளையும் துரத்தி அடித்து வந்தது. மிகவும் உடல்நலம் குன்றி நடமாடி வந்த அந்த ஆண் யானை, இன்று காலை, திடீரென அணையின் நீர் தேக்க பகுதியில் படுத்து விட்டது. உடனடியாக, கிராம மக்கள் சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிசாமி, கால்நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட 15-க் கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர் கள் சம்பவ இடத்திற்கு வந்து, யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார்கள்.  ஆண் யானைக்கு குளுக்கோஸ், மருந்து மற்றும் குடிப்பதற்கு தண்ணீரை கொடுத்தும், யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கை, கால்களை அசைத்து வரும் அந்த ஆண் யானை,  எழ...

பத்திரிக்கைகள் செய்தி எதிரொலி மயிலாடுதுறையில் இடிந்து விழுந்த துலா கட்ட காவிரிக் கரை சுவர் சீரமைப்பு பணி துவக்கம்

Image
பத்திரிக்கைகள் செய்தி எதிரொலி; மயிலாடுதுறையில் இடிந்து விழுந்த துலா கட்ட காவிரிக் கரை சுவர் சீரமைப்பு பணி துவக்கம்!   மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் உள்ள தென்கரையின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த மழையால் திடீரென்று பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மிகவும் புனிதமான இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் உடனடியாக தடுப்பு சுவர் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துலாக் கட்ட இடிந்த பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். அதனை அடுத்து அப்பகுதியில் ஹிட்டாச்சி ஜேசிபி இயந்திர உதவியுடன் இடிபாடுகளை அகற்றி பணிகளை பொதுப்பணித்துறையினர் துவக்கினார்கள். விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் பத்திரிக்கை, செய்தி ஊடகத்துறை யினருக்கும் பொதுப்பணித்துறையினருக்கும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உள்பட பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
*மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது! உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*   மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதி மிகவும் புனிதமானது. காசிக்கு நிகரானது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் புனிதமான கங்கை இங்கே வாசம் செய்வதாக ஐதீகம். கங்கையின் பாவத்தை போக்கிய காரணத்தால் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடும் நிகழ்வு துலா கட்டத்தில் நடைபெறுவது வழக்கம். இங்கு 2017 ஆம் ஆண்டு காவேரி மகா புஷ்கரம் விழா விழா சிறப்பாக நடைபெற்றது.12 நாட்கள் நடைபெற்ற விழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள், சங்கராச்சாரியார்கள், ஆதீன மடாதிபதிகள், துறவியர்கள் மற்றும் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். இப்படிப்பட்ட பெருமைமிக்க துலாக் கட்ட பகுதியை முழுமையாக பராமரிக்க வேண்டும், எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென்று தற்பொழுது துலா கட்டத்தின் தெற்குப்புற கிழக்குப் பகுதியில் மழையினால் அரிப்பு ஏற்பட்டு...