பத்திரிக்கைகள் செய்தி எதிரொலி மயிலாடுதுறையில் இடிந்து விழுந்த துலா கட்ட காவிரிக் கரை சுவர் சீரமைப்பு பணி துவக்கம்

பத்திரிக்கைகள் செய்தி எதிரொலி; மயிலாடுதுறையில் இடிந்து விழுந்த துலா கட்ட காவிரிக் கரை சுவர் சீரமைப்பு பணி துவக்கம்! 

 மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் உள்ள தென்கரையின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த மழையால் திடீரென்று பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மிகவும் புனிதமான இப்பகுதியை பாதுகாக்க வேண்டும் உடனடியாக தடுப்பு சுவர் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துலாக் கட்ட இடிந்த பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். அதனை அடுத்து அப்பகுதியில் ஹிட்டாச்சி ஜேசிபி இயந்திர உதவியுடன் இடிபாடுகளை அகற்றி பணிகளை பொதுப்பணித்துறையினர் துவக்கினார்கள். விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் பத்திரிக்கை, செய்தி ஊடகத்துறையினருக்கும் பொதுப்பணித்துறையினருக்கும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் உள்பட பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்