Posts

தாய் இறந்த நிலையில் கண்ணீருடன் தேர்வெழுத சென்ற பிளஸ் 2 மாணவி.

Image
 இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த தாய் - தாயின் காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்று அரசு பொதுத்தேர்வெழுத சென்ற மகள்.  உறவினர்களை கலங்க வைத்த பட்டுக்கோட்டை அருகே வெட்டுவாகோட்டையில் நடந்த  சம்பவம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார்.  தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி காவியாவிற்கு இன்று (பயாலஜி) உயிரியல் தேர்வு. இன்னும் சற்று நேரத்தில் தேர்வு தொடங்க உள்ள நிலையில் காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை உயிரிழந்தது காவியாவிற்கு மிகப்பெரிய இடியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட காவியா தன் தாய் வீட்டில் இறந்துக...

மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க வந்தவர் கீழே விழுந்து பலி... சிசிடிவி

Image
 மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க வந்தார் தீடீரென உயிரிழந்தார். மயக்கம் அடைந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள PN ரோடு  போயம்பாளையம் பஸ் நிறுத்தம் கிழக்கு பழைய அபிராமி தியேட்டர் சாலையிலுள்ள மெடிக்கலில் மாலை 4.30 மணியளவில் மாத்திரை வாங்க வந்தார், தீடீரென மயக்கமடைந்து தானாக கீழே விழுந்துள்ளார்.  கீழே விழுந்தவரை மருந்து கடையில் பணியாற்றும் ஊழியர்கள் முதலுதவி கொடுக்க முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் வந்தது பரிசோதித்த போது ஏற்கெனவே உயிரிழந்தார் என தெரித்தனர். மேற்படி உயிரிழந்தவர் போயம்பாளையம் கிழக்கு பொம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகின்ற உடுமலைப்பேட்டை தேவானாம் புதூர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் ரமேஷ்குமார் 42 ஆவார். உயிரிழந்த ரமேஷ்குமாருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும் 16, 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மேற்படி உயிரிழந்த ரமேஷ்குமார் பெரியார் காலணியிலுள்ள பஞ்சு மில்லில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இது தொட‌ர்பாக அனுப்பர்பாளையம் காவல...

திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவில் மாசி தேரோட்டம் !

Image
திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில் மாசி மாத தேரோட்டம் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நமச்சிவாயா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம். திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும்,சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் பாடல்பெற்ற திருத்தலம், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்த திருமுருகநாத சுவாமி கோயிலில் மாசி மாதம் தேர்த் திருவிழா மார்ச் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவ மூர்த்திகள்  திருவீதி உலா நடைபெற்றன. கடந்த பத்தாம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்வும்,அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வான   திருத்தேரோட்டத்தில்  திருமுருகநாதேஸ்வரர், சோமாஸ்கந்தர் அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்  பாலித்தார்,தொடர்ந்து திருத்தேரினை பக்தர்கள் நமச்சிவாயா கோஷத்துடன் இழுக்க  தொடங்கிய போது  கனமழை ...

பவுர்ணமி, வார இறுதிக்கு திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பஸ்கள்... அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

Image
 பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்   தகவல்    13/03/2025 அன்று பௌர்ணமியை முன்னிட்டும் 14/03/2025 (வெள்ளிக்கிழமை), 15/03/2025 (சனிக்கிழமை), 16/03/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.           13/03/2025 அன்று பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகளை  இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, த...

சிவலிங்கம் வடிவில் விழுந்த தேங்காய்... பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பொதுமக்கள்!

Image
 பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தில் திடீரென தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த தேங்காய் சிவலிங்கம் வடிவில் இருந்ததால் வியந்துபார்த்து   பாலாபிஷேகம் செய்து பூஜைகள் செய்து வழிபட்ட பொதுமக்கள் தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தில் கீழத்தெருவில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று இரவு சிவன் ராத்திரியை முன்னிட்டு இந்த கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிசயம் நடந்தது.  அந்த கோயில் வளாகத்தில் உள்ள  தென்னை மரத்திலிருந்து திடீரென ஒரு தேங்காய் கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த தேங்காயை பார்க்கும்போது அச்சு அசல் சிவலிங்கம் வடிவில் இருந்துள்ளது. உடனே அங்கிருந்த பக்தர்கள் சிவன்ராத்திரி அன்று இதுபோல் சிவபெருமான் நமக்கு காட்சியளிக்கிறார் என்று சிவலிங்கம் வடிவில் இருந்த தேங்காயை எடுத்து வைத்து சிவனாக நினைத்து வழிபடத் தொடங்கினர்.  இந்த செய்தி அருகில் உள்ள பொதுமக்களுக்கும் பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஒன்று திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சிவலிங்கம் வடிவிலான தேங்காய்க்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ததுட...

தேசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய திருப்பூர் வீராங்கனை ஸ்ரீவர்த்தினி!

Image
இந்திய தடகள க்  கூட்டமைப்பின் சார்பில் , 38 வது தேசிய அளவிலான  விளையாட்டு ப்போட்டிகள் ,  உத்தரகாண்ட் மாநிலம் ,  டேராடூன்-ராய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் சிங் ஸ்டேடியத்தில் ,  கடந்த பிப் ரவரி மாதம்    8 ம் தேதி முதல்  12 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் வீரர்கள் ,  வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர்.   நமது திருப்பூர் , ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப்  வீராங்கனை  S.K. ஸ்ரீவர்த்தனி , மகளிர்  பிரிவின் , 400 மீ தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று ,  வெள்ளிப்பதக்கம்   வென்று பெருமை சேர்த்துள்ளார். ஓட்ட தூரத்தை  59.86  நொடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.  இந்த வெற்றியானது இந்திய தடகளக் கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும், இந்திய அளவில் முதல் 16 தரவரிசையில் உள்ளவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப்போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்றுப் பதக்கம் வெல்வது இது முதன்முறையாகும். இந்த விளையாட்டுப் போட்டி  இந்திய ஒலிம்பிக் போட்டிகள் ...

பேருந்து கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி... 21 பேர் படுகாயம்!

Image
திருப்பூரில் இருந்து இன்று காலை தனியார் பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பயணம் செய்தார்கள்.  இந்த நிலையில் இந்த பேருந்து கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அடுத்த பள்ள கவுண்டம்பாளையம்  வரும்போது, ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்தது.  இதில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களான பெரியசாமி மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தவிர 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  படுகாயம் அடைந்த அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.விபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்துள்ளனர்.   இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான ப...