மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க வந்தவர் கீழே விழுந்து பலி... சிசிடிவி

 மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க வந்தார் தீடீரென உயிரிழந்தார். மயக்கம் அடைந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள PN ரோடு  போயம்பாளையம் பஸ் நிறுத்தம் கிழக்கு பழைய அபிராமி தியேட்டர் சாலையிலுள்ள மெடிக்கலில் மாலை 4.30 மணியளவில் மாத்திரை வாங்க வந்தார், தீடீரென மயக்கமடைந்து தானாக கீழே விழுந்துள்ளார். 

கீழே விழுந்தவரை மருந்து கடையில் பணியாற்றும் ஊழியர்கள் முதலுதவி கொடுக்க முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் வந்தது பரிசோதித்த போது ஏற்கெனவே உயிரிழந்தார் என தெரித்தனர்.

மேற்படி உயிரிழந்தவர் போயம்பாளையம் கிழக்கு பொம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகின்ற உடுமலைப்பேட்டை தேவானாம் புதூர் பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் ரமேஷ்குமார் 42 ஆவார். உயிரிழந்த ரமேஷ்குமாருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும் 16, 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.



மேற்படி உயிரிழந்த ரமேஷ்குமார் பெரியார் காலணியிலுள்ள பஞ்சு மில்லில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இது தொட‌ர்பாக அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி