Posts

தூத்துக்குடி அய்யா்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு.!

Image
  தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டு மாநகரில் சூழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அய்யர்விளை குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள பம்ப் ரூம் பகுதியில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை நீக்கி சீர் செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அப்பகுதி மக்களிடம் குறைகளை யும் கேட்டறிந்தாா்.  "10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கான எந்த அடிப்படை பணிகளை செய்யாமல் இருந்ததின் காரணமாக பல குறைபாடுகள் ஏற்பட்டது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ரூரல் பகுதியாக இருந்து மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட இந்த பகுதியில் புதிதாக கால்வாய் சாலை மின்வ...

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு.!

Image
  வடகிழக்கு பருவமழை பெய்வதையொட்டி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவுபடி பி அண்டி காலணி பகுதியில் மழைநீர் வௌியேற்றம் நடைபெறுவதையும், எட்டையாபுரம் ஹவுசிங் போா்டு பகுதியிலிருந்து வடிகால் மூலமாகவும் மின் மோட்டாா் மூலமாகவும் மழைநீர் வெளியேற்றப்படுவதையும், கேடிசி நகாில் பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் மூலமாக போல்பேட்டை பகுதியில் நடைபெறும் மழைநீர் வெறியேற்றம், மச்சாது நகா் ஆதிபாராசக்தி நகா் ஆகிய இடங்களில் மின்மோட்டாா் மற்றும் பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் மூலமாக மழை நீர் வெளியேற்றுதல், புறநகா் பகுதியிலிருந்து பண்டாரம்பட்டி குளத்திற்கு வருகின்ற மழைநீரையும் மேலும் மாநகருக்குள் வராமல் இருப்பதற்காகவும், நான்காம் கேட் அருகில் பக்கிள் ஓடையில் மழைநீா் வெளியேறுவது புறநகாிலிருந்து வருகின்ற மழைநீா் மாவட்ட தொழில் மையம் முன்புள்ள வடிகால் மூலம் ஊருக்குள் வராமல் இருப்பதையும், நிகிலேசன் நகா் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையிலும் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்று மேயர் ஜெகன் பொியசாமி சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டாா்.  ஆய்வ...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர், கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.! -Tenkasi Weatherman

Image
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது இதன் காரணமாக இன்று பாம்பன் இராமேஸ்வரம் ,தங்கச்சிமடம், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர், கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை, உவரி, கூடன்குளம், செட்டிகுளம், கன்னியாகுமரி, ஆகிய கடலோர பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.  நெல்லை மாவட்டத்திலும் இன்று பரவலாக மிதமான  மழை பெய்யும் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.  தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மழையின் அளவு படிப்படியாக குறையும் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு. மாவட்டத்தில் எங்குமே கனமழைக்கு வாய்ப்பு இல்லை.  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய இடங்களிலும் லேசான மழை தான் பெய்யும். எனவே தங்களுடைய விவசாய பணிகளை தாராளமாக மேற்கொள்ளலாம்.  பாபநாசம் மணிமுத்தாறு அணைகளை மூட வேண்டும்.  தற்போது மழையின் தீவிரம் குறைந்த காரணத்தால் பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறப்பை குறைந்து...

வெள்ள அபாய எச்சரிக்கை 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டிற்கு தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு சுமார் 20000 கன அடி வெள்ள உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது.!

Image
  தற்போது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பின்படி, தொடர் கனமழை காரணமாக காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 12000 கன அடியும் மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 4000 கனஅடியும் வெள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திறந்து விடப்பட்டுள்ள வெள்ள உபரி நீர் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டிற்கு 25.11.2025 அன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி,  திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தற்போது திறந்து விடப்பட்ட வெள்ள உபரிநீரையும் சேர்த்து மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 33000 -ல்  இருந்து 35000 கன அடி வரை வெள்ள உபரி நீர் 25.11.2025;காலை 6 மணி முதல் 7 மணி வரை வந்து சேரும். எனவே, மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிக...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் : தாமிரபரணி ஆற்றில் மிகக் கூடுதலான உபரி நீர் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

Image
  தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர பகுதி  மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும்  மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில்  கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தாமிரபரணி ஆற்றில் வரும் வெள்ள உபரி நீரின் அளவு மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இன்று பிற்பகல் 6 மணி நிலவரப்படி,  மருதூர் அணைக்கட்டில் 11.8 அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் 11.6 அடியும்,கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.7 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது. மேலும், மருதூர் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 32,209 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 28,450 கன அடியும் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.  கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 3000 கன அடி உபரி நீர் உப்பாத்து ஓடையில் ...

"இந்திய இராணுவத்தில் மறவர் ரெஜிமெண்ட் படை பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும்" - பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் இசக்கிராஜா பேச்சு.!

Image
  திருநெல்வேலி: பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சமுதாய பணியும், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் மனநிலையும் குறித்து மாநில தென்மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல், அரசியல் கலந்தாய்வு திருநெல்வேலியில் தனியார் மஹாலில் வைத்து நடைபெற்றது.  மாநில தலைவர் இசக்கிராஜா தேவர் கலந்துரையாடலின் போது கூறுகையில்:- "இந்திய இராணுவத்தில் மறவர் ரெஜிமெண்ட் படை பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும். வரும் 2026 தேர்தலில் நம்முடைய சமுதாய பங்களிப்பு எப்படியெல்லாம் இருக்க வேண்டும். நம்மை தூக்கி பிடிப்பவர்களை நாம் ஆதரிக்க வேண்டும. கொள்கையில் உறுதியாக இருந்து நம் சமுதாய மக்களை காப்பதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுவோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசினார்.  பின்னர் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதிகார பலத்தைப் பயன்படுத்தி, கவின் கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாத சுர்ஜித்தின் தந்தை சரவணனை பழிவாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். சுர்ஜித்தின்...

தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து -8 பேர் பலி.!

Image
  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் பலியாகியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மேலும் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.