புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர், கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.! -Tenkasi Weatherman
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது இதன் காரணமாக இன்று பாம்பன் இராமேஸ்வரம் ,தங்கச்சிமடம், தூத்துக்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர், கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை, உவரி, கூடன்குளம், செட்டிகுளம், கன்னியாகுமரி, ஆகிய கடலோர பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
நெல்லை மாவட்டத்திலும் இன்று பரவலாக மிதமான மழை பெய்யும் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைப்பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மழையின் அளவு படிப்படியாக குறையும் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு. மாவட்டத்தில் எங்குமே கனமழைக்கு வாய்ப்பு இல்லை.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி எட்டயபுரம் ஆகிய இடங்களிலும் லேசான மழை தான் பெய்யும். எனவே தங்களுடைய விவசாய பணிகளை தாராளமாக மேற்கொள்ளலாம்.
பாபநாசம் மணிமுத்தாறு அணைகளை மூட வேண்டும்.
தற்போது மழையின் தீவிரம் குறைந்த காரணத்தால் பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறப்பை குறைந்து அணைகளை நிரம்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என தனியார் வானிலை ஆய்வாளர் தென்காசி வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
