விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி; வறுமையை வென்ற ஐ.ஏ.எஸ்.நாயகன் சிவகுரு பிரபாகரன்

குடும்ப சூழலும் வறுமையும் தமது இலட்சியத்தை அடைவதற்கு தடைகள் அல்ல என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.... இவர் பெயர் திரு சிவகுரு பிரபாகரன். தற்போது இவர் IAS பயிற்சியில் உள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு குக்கிராமத்தில் மிக வறுமை குடும்பத்தில் பிறந்தவர். தாய் மட்டுமே சாலை ஓரத்தில் இளநீர் விற்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவர் நன்றாக படித்ததன் காரணமாக அரசு கல்லூரியில் BE படிப்பில் சேருகிறார். ஆனால் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை. படிப்பை பாதியில் விட்டு விட்டு கிராமத்திற்கு வந்து தாய்க்கு துணையாக தானும் ஒரு மரக்கடையில்பணியிலெ சேருகிறார். அவ்வருமானத்தை கொண்டு தம்பி தங்கையை படிக்க வைக்கிறார். சில ஆண்டுகள் கழித்து தன் படிப்பை தொடர்ந்து முடிக்கிறார். சென்னையில் ME சேருகிறார் வறுமை தொடர்த்துகிறது. பல ஓட்டல்களில் வேலை பார்த்து க்கொண்டே படிக்கிறார். தனது இலட்சியத்தை அடையும் வகையில் பரங்கிமலை அருகே ஒரு சிறிய IAS பயிற்சி நிலையத்தில் சேருகிறார். இரவில் படுக்கை எல்லாம் பரங்கிமலை ரயில் நிலையம் தான். இறுதியில் அவரின் விடாமுயற்சியும் இலட்சியமே வென்றது.2018 ல் IAS அலுவலராக தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சியில் உள்ளார். எந்த குடும்ப சூழலும் வறுமையும் பிறச்சூழல்களூம் விடாமுயற்சியின் முன் தோற்று விடுகின்றன என்பதற்கு நண்பர் திரு சிவகுரு பிரபாகரன் ஒரு அடையாளம். பல கனவுகளை சுமந்து கொண்டு வறுமையில் வாழும் பல இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கட்டும் என்பதற்காகவே இப்பதிவு......


 


மு. சுந்தர்ராஜன்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்