ரூ.4.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

திருப்புர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 29/07/2019 கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைபட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 348 மனுக்களை பெற்றுக் கொண்டார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.79,000 மதிப்பில் நவீன செயற்கை அவயத்தினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, மற்றும் மடத்துக்குளம் ஆகிய வட்டங்கனைச் சோர்ந்த 7 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.3355 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 14 சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.1,49,000 த்திற்கான ( பள்ளிகளில் பயிலும் 11 நபர்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் கல்லூரிகளில் பயிலும் 3 நபர்களுக்கு தலா ரூ.13,000 என மொத்தம்  25 பயனாளிகளுக்கு ரூ.4,73,355 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவார் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார். 2017- 2018 ஆம் நிதியாண்டில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய 22 மகளிர் முகவர்கள் மற்றும் நிலை முகவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், சமூகபாதுகாப்புத்திட்ட தணித்துணை ஆட்சியர் விமல்ராஜ், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் திரு.அலாவுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ஞானசேகரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பெரியகருப்பன், துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்களும் கலந்து கொண்டனா;.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்