பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலை துறையினர் அழைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் காரிப் 2019-ல் பயிர் காப்பீடு மஞ்சள், மரவள்ளி, வாழை, வெங்காயம், தக்காளி மற்றும் மா-பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்ட வட்டாரங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்துள்ள மஞ்சள், வாழை, மா, மரவள்ளி மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் 30.09.2019 மற்றும் தக்காளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய 31.08.2019 கடைசி நாள். மஞ்சள் பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.3685 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.9702. வாழை பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.4070 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.10053. வெங்காயம் பயிருக்கு காப்பீடு செய்ய  பிரீமியத்தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.1920 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.4742. மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1510 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.3730. தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1350 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.3335. மா பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.1025 மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.2532. மா, வாழை, மஞ்சள், மரவள்ளி, வெங்காயம் மற்றும் தக்காளி பயிர் செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் கே எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!