வள்ளி கும்மி அரங்கேற்றம்


நவீன் பிரபஞ்ச நடனக் குழுவின் திருப்பூர் அணி சார்பில் வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி மங்கலத்தில் உள்ள மேற்கு ரோட்டரி மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ் துவக்கி வைத்தார். ஸ்கை சுந்தர்ராஜ், வாழ்க வளமுடன் மன்ற தலைவர் கந்தசாமி, பல்லடம் வனாலயம் அறங்காவலர்கள், மேற்கு ரோட்டரி சங்கத்தினர்கள் உடன் இருந்தனர்.



இந்த அரங்கேற்ற நிகழ்வில் மொத்தம் 25 பெண்கள் கலந்துகொண்டார். முதலில் அனைவரும் ஒன்றாக குழுப் படம் எடுத்துக் கொண்டனர். முதலில் குத்து விளக்கை ஏற்றி கணபதிக்கு மரியாதையை செலுத்திவிட்டு அனைவரும் பெரியவார்களிடம் சலங்கையை கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று சலங்கையை வாங்கினர். அதன் பிறகு நடராஜரை வணங்கிவிட்டு அரங்கேற்ற நிகழ்விற்கு ஆயத்தமானார்கள். நவீன் பிரபஞ்ச நடனக் குழு ஆசிரியர் நவக்கரை வி.நவீன்  வள்ளியை, வேடன் வேடமிட்டு வந்து முருகன் திருமணம் செய்த நிகழ்வினை வள்ளியின் பிறப்பு முதல் ஒவ்வொரு நிகழ்வாக ராகத்துடன் பாடினார். அந்த பாடலுக்கு ஏற்ப அவர்கள் நடனமாடினார். வள்ளியின்  கதையை ஒவ்வொரு நிகழ்வுகளையும் கதையாக சொல்லிவிட்டு பின்பு பாடலாக பாடினார். நிகழ்வுகளை விளக்கத்துடன் தெளிவாக எடுத்து சொல்லியது அனைவரையும் ரசிக்க செய்தது.



ஒவ்வொரு நிகழ்வுகளையும் தனித்துக் காட்டும்படி தங்களது நடன அசைவுகளையும் மாற்றி ஆடியது பார்ப்பவர்களின் உற்சாகத்தை தூண்டுவதாக இருந்தது. கும்மியாட்டம் பற்றி நவீன் கூறுகையில் அசையாது இருக்கும் உடலை அசைத்துப் பழகுவதும் அசைந்து கொண்டிருக்கும் மனதை அசையாமல் இருக்க பழகுவதும் இந்த கும்மியாட்டம் மனித இனத்திற்கு தந்த வரம். இங்கு ஆடுபவர்கள் ஆரம்பத்தில் ஒருமணி நேரம் ஆடுவதே சிரமமாக இருந்தது. இன்று மூன்று மணி நேரம் கூட சோர்வின்றி ஆடும் அளவிற்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஆகியுள்ளது இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வினை ஏராளமான பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!