உலகில் அருளாட்சி மலர்ந்து அமைதியும் செழிப்பும் உருவாகும் - மகாலட்சுமி சாமிகள் பேச்சு 

திருப்பூர் தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஆடி அமாவாசை குருபூஜை விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த குருபூஜை விழாவில் மகாலட்சுமி சாமிகள் ஆன்மிக கொடி  ஏற்றினார். தொடர்ந்து மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாக பூஜைகள் நடைபெற்றன. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து மகாலட்சுமி அம்பாளுக்கு அபிஷேக பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மகாலட்சுமி சாமிக்கு குருபூஜை நடந்தது. இதில் சாமிக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதையடுத்து அன்னதானத்தை மகாலட்சுமி சாமிகள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் மகாலட்சுமி சாமிகள் பேசும்போது, ' உலகில் நடக்கும் அநீதிகள் முடிவுக்கு வந்து கல்கி அவதரித்து விட்டார். தென் தமிழகத்தில் அவதரித்து உள்ளதாக பல ஆன்மிகவாதிகளும், அறிஞர்களும் தெரிவித்து இருக்கின்றனர். இதை அறிந்து அனைவரும் சத்திய வழியில் நடக்க வேண்டும். விரைவில் இந்த உலகில் அருளாட்சி உருவாகி அமைதியும் செழிப்பும் உருவாகும். என்றார்.


 இந்த நிகழ்ச்சியில், அன்னலட்சுமி, சிவகாசி ஐங்கரன், சூர்யபிரபா குப்புசாமி, ஜெயலானி, ஜெகநாதன், பிரபுராம், டேனியல், ஜெயராஜ், விஜயகுமார், பெருமாள் சாமி, சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்