திருப்பூரில் 15வது மாபெரும் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி

திருப்பூர் கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் கடந்த 15 வருடங்களாக  கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடத்தி வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 15 வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 26,27,28,29 ஆகிய தேதிகளில் திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்ய கார்த்திக் திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது. 


 

  இக்கண்காட்சியில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல், ஆர்.எம்.சி கான்கிரீட், கதவு, ஜன்னல், கிராணைட், டைல்ஸ், மின்சாதன பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், குளியலறைப் பொருட்கள், சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருட்கள், சமையலறை அலங்காரம், உட்புற வெளிப்புற அலங்காரம், பெயிண்ட், கட்டுமான துறையில் புதிதாக வந்துள்ள செங்கல்லுக்கு பதிலாக ஏ ஏ சி பிளாக்குகள், சிமெண்ட் பூச்சுக்கு பதிலாக ஜிப்சம் பூச்சு, தானியங்கி மின்சாதன பொருட்கள், கூலிங் டைல்ஸ்கள், இயற்கையை பாதிக்காத வகையில் பசுமையை பாதுகாக்கும் வகையிலான கட்டுமான பொருட்கள், ரெடிமேடு நீச்சல் குளம்  ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்கு அமைக்க உள்ளனர்.  

 

  திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வை உருவாக்க தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.

 

லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் வடக்கு, லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் உடன் இணைந்து அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாமை lion. எஸ்.குமாரரத்தினம்M.A,H.H.A,DSA,BEMS,N.D,FRIM,MD(Acu),MD(VARMA) தலைமையில் தினமும் மாலை 4மணி முதல் 7மணி வரை நடைபெற உள்ளது. தினமும் இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்வினை இயற்க்கை வேளாண் விஞ்ஞானி PMJF Lion.ஜி.மயிலசாமி துவக்கி வைக்க உள்ளார். 

 

  திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்ரி கிளப், திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர், ஸ்ரீ அசுவிகா மருத்துவமனை இணைந்து இலவசமாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ECG பரிசோதனைகள்  26,27,28 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 

 

  லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் வடக்கு, லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனையுடன்  இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் 26 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

 

இதனை தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு காலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

26ம் தேதி வேலா.இளங்கோ வழங்கும் ஏலேலங்கடியோவ் குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி. 

27ம் தேதி பொறியாளர் குழந்தைகளின் காலை நிகழ்ச்சிகள் 

28ம் தேதி கோவை தபஸ்யாமிர்தம் பாரம்பரிய நடனப் பள்ளியின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

 

இக்கண்காட்சியினை பொறியாளர்கள், கட்டிட நிறுவனங்கள் நடத்துபவர்கள், கட்டுனான பொருட்கள் விற்பனையாளர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் 

என்று அனைவரும் கண்டு பயன்பெற வேண்டும் என்று  தலைவர் சிவபாலசுப்பிரமணியம், செயலாளர் ஸ்டாலின்பாரதி, பொருளாளர் ஜார்ஜ் லியோ ஆனந்த், கண்காட்சி தலைவர் ரமேஷ் (எ) அருண், கண்காட்சி செயலாளர் துரைசாமி, கண்காட்சி பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!