பெரம்பலூரில் பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்


 

பெரம்பலூர் மாவட்டம்வேப்பந்தட்டை தாலுகா வல்லாபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட மாணவரணி செயலாளருமான இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். வல்லாபுரம் பொதுமக்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வனிடம் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று நேற்று ரேஷன் கடையை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் பெரம்பலூர் நில வள வங்கி தலைவரும், வேப்பந்தட்டை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான சிவப்பிரகாசம், மாவட்ட பதிவாளர் (கூட்டுறவு)பாண்டித்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்ல .கிருஷ்ணமூர்த்திமற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்