எம்.எல்.ஏ.சு.குணசேகரன் கோரிக்கையை ஏற்று திருப்பூருக்கு மருத்துவக் கல்லூரி 

 


வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=1oT7KCrF0rc&feature=youtu.be


திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக 2018-2020-ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட தொகை, நடைபெற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொண்டது.



இந்த குழு திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்ட பொழுது தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் திருப்பூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  மேலும் மற்ற மாவட்டங்களில் இட  வசதி என்பது பெரும் தடையாக உள்ளது. ஆனால் திருப்பூரில் இடம் தயாராக உள்ளதாக   தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் தெரிவித்திருந்தார். அதற்க்கு  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர்  செம்மலை தெரிவிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தெரிவித்தார்.  இடம் தயாராக உள்ள நிலையில்   மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு பரிந்துரைக்கும் என தெரிவித்தார். 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்