வேப்பூர் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேப்பூர் தீயணைப்புத் துறை மற்றும் வருவாய் துறை சார்பில் இயற்கை பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

 


 

வேப்பூரில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்துறை இணைந்து மழை வெள்ள காலங்களில் தற்காத்து கொள்ளவும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாச்சியர் கமலா தலைமை தாங்கினார். துணை வட்டாச்சியர் பூர்ணிமாவினிதா, வருவாய் ஆய்வாளர் பழனி முன்னிலை வகித்தனர். வேப்பூர்  கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி வரவேற்றார். வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மணி, சதாசிவம், தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், இயற்கை பேரிடரின் போது செய்ய வேண்டியவை, விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்