திறந்தவெளி தொட்டிகள் வைத்திருந்த டையிங் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திறந்தவெளி தொட்டிகள் வைத்திருந்த டையிங் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் 

 


திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவியதை அடுத்து வாரம் தோறும் கொசு ஒழிப்பு, நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் தலைமையில், முதலிபாளையம் ஊராட்சியில் தீவிர டெங்கு தடுப்பு, மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 182 பேர் பணிகளில் ஈடுபட்டனர். இதில் பணியாளர்கள் நீர்த்தேக்க தொட்டிகளை, தூய்மை செய்தல், குப்பைகள் அகற்றுதல், கொசு மருந்து தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் மீனாட்சி நகர் பகுதியில் உள்ள டையிங் நிறுவனம் ஆண்டுக்கணக்கில் செயல்படாமல் இருந்த நிலையில், அங்குள்ள டையிங் திறந்தவெளி தொட்டிகளில் ஏராளமான கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே கொசு மூலம் நோய் பரவ காரணமாக இருந்த  டையிங் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி