ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம்  

ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம்  அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் புதுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூட்டை உடைத்து, நேற்றிரவு புகுந்த கொள்ளையர்கள் சாமி கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் உண்டியலை தூக்கி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 



இதற்கிடையே இதற்கு அடுத்துள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம், கொண்டத்து காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து, சாமி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை எடுத்துச் சென்று விட்டனா். இதற்கு அடுத்து மலையடிப்புதூர் உள்ள புதுமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளை அடித்துச் சென்று விட்டனா். உண்டியலின் பூட்டை உடைக்க முடியாத தால்.அப்படியே விட்டுச் சென்று விட்டனா்.


சத்தியமங்கலம் அருகே அடுத்தடுத்த கிராமங்களில் ஓரே நாளில் மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவில் கொள்ளைகளில் வட மாநில கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை செய்து வருகின்றனா்.


 


 


 


.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்