வேப்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடியை மர்மநபர்கள் கிழித்ததால் பரபரப்பு 

வேப்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடியை மர்மநபர்கள் கிழித்ததால் பரபரப்பு போலிசார் விசாரணை. 

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  வேப்பூர் அடுத்த கீரம்பூர் கிராம பஸ் நிறுத்தம் அருகில் கடந்த ஆகஸ்ட் மாதம்  வி.சி.க. தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகள் கொடியேற்றினார்கள்  அந்த  கம்பத்திலிருந்த கொடியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ இறக்கி துண்டு துண்டாக  கிழித்தனர்.  இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அச்சாலையில் கூடினார்கள் இது குறித்து தகவலறிந்த  வேப்பூர் சப் – இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் சம்பவ இடத்திற்கு சென்று  கிழிந்த விடுதலை சிறுத்தைகள்  கட்சி கொடியை பறிமுதல் செய்தார். இது குறித்து திட்டக்குடி டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா  உள்ளிட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், பா.ம.க., மாவட்ட செயலர் கார்த்திகேயன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேலன்  தலைமையிலானவர்கள், வேப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று  வி.சி.க,   கொடி கிழிப்பிற்கும் கிராம மக்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், தேர்தலின் போது அகற்றிய பா.ம.க., கம்பத்தை மீண்டும் அதே இடத்தில்  வைக்க அனுமதிக்க  வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் முறையிட்டனர்  பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  மாநில வழக்கறிஞரணி துணை செயலர்  காந்தி, ஒன்றிய செயலர்கள் விருத்தாசலம்  திருஞானம், வேப்பூர்  சந்தோஷ், மங்களூர்  காசி தலைமையிலானோர், விடுதலை சிறுத்தைகள் கட்சி   கொடியை கிழித்ததாக நான்கு பேர் மீது சந்தேகம் உள்ளதெனவும்,கட்சி  கொடியை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.  இப்புகார் குறித்து  வேப்பூர் போலீசார் விசாரிப்பதாக கூறினர். தொடர்ந்து பிரச்சனை ஏற்படுவதை தடுக்க விசிக, பாமக ஆகிய  இரு தரப்பினருக்கும் விருத்தாசலம் தாசில்தார்  தலைமையில்  சமாதான கூட்டம் நடத்த போலீசார் முயற்சி செய்கின்றனர்.  இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்