பழனியில் தாலுக்கா அளவிலான இறகு பந்து போட்டி

பழனியில் தாலுக்கா அளவிலான இறகு பந்து போட்டியில்  50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடினர்.



பழனி காந்தி ரோட்டில் உள்ள பிஎஸ்கேஎல் வணிக வளாகத்தில் உள்ள பிஎஸ்கேஎல் ஸ்போர்ட்ஸ் அகடாமி  உள் விளையாட்டு அரங்கில் ஆடவர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பழனி தாலுக்கா பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு விளையாடினர்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  இருபிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் கோப்பை மெடல்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியை பழனி நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்துள்ளார்.  சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும்  பலரும் கலந்து கொண்டனர்.



இந்த விளையாட்டு போட்டியில் முதல் பரிசாக கண்ணன்  மற்றும் நிர்மல் பிஎஸ்கேஎல் ஸ்போர்ட்ஸ் அகடாமி, இரண்டாவது பரிசாக மைதீன் மற்றும் கரீம் எஸ்ஜே ஸ்போர்ட்ஸ் அகடாமி, மூன்றாவது பரிசாக நவீன் மற்றும் அப்பாஸ் பீனீக்ஸ் கிளப், நான்காவது பரிசாக
சரவணன்  மற்றும் பூபதி மற்றும் கால் இறுதிக்கான பரிசை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு பிஎஸ்கேஎல் விளையாட்டு அரங்கின் உரிமையாளர்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமிபதி ராஜு அவர்களின் பேரன் ருக்மாங்த ராஜு   பல பயிற்சியாளர்கள் போட்டியை மேற்பார்வையிட்டார், இறுதியில் லோகநாயகி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்