குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.



செங்கோட்டையில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லீம்கள் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையம் அருகில் வாஞ்சிநாதன் சிலை முன்பு செங்கோட்டை வட்டார ஐக்கிய முஸ்லீம்
ஜமாத் மற்றும் வட்டார ஜமாத்துல் உலாமா சார்பில் புதிய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரியும் புதிய குடியுரிமை சட்டம் வெற்றி பெற வாக்களித்த தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் மீரான் தலைமை தாங்கினார். செங்கோட்டை அனைத்து ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  செயலாளர் செய்யது குலாம் வரவேற்று பேசினார். இமாம் கமருதீன் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து
சிறப்புரையாற்றினார். அரபிக்பஷீர்இ மீரான்இ காதர்ஒலிஇ நாசர் ஒலிஇ சீராஜ்
ஆகியோர்பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்ட்டது. முடிவில் சமூக ஆர்வலர் சலீம் நன்றி கூறினார்.


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்