தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!!

தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளினை முன்னிட்டு நந்தா, எக்ஸ்சல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகள் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம் ஈரோடு நந்தா சென்டரல் சிடடி பள்ளியில் இனிதே நடைபெற்றது. இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் புனேயில் செயல்பட்டு வரும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் மற்றும் ஆயுஸ் அமைச்சகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முகாமினை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி என்.உமா மஹேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விள்க்கேற்றி துவக்கி வைத்தர்  ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர்  வி. சண்முகன் தலைமை தாங்கி, முகாமினை ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி பேசினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக  ஈரோடு கலெக்டர் சி. கதிரவன் மற்றும மற்றும் வருவாய் கோட்டாசியர்  முருகேஷ் ஆகியோர்  கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் கள். 


இம்முகாமில் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர்  கே. சத்யலட்சுமி ஒளி, ஒலி காட்சி மூலமும் மற்றும் ஆயுஸ் அமைச்சகத்தின் மூத்த மருத்துவர்  பி. யுவராஜ் ஆகியோர்  கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு இயற்கை மற்றும் யோகா மருத்துவம் பற்றிய விளக்கவுரையினை நிகழ்த்தினார்கள். இம்முகாமில் “ஆரோக்கிய ரக்ஷா பஞ்சதந்திரா” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநில அளவிலான் கருத்தரங்கில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளிலிருந்து சுமார் 400க்கு  மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு தனது சந்தேகங்களை தெளிவு படுத்திகொண்டு பயன் அடைந்தார்கள். இதனை முன்னிட்டு ஈரோடு மாவட்ட பள்ளிகளை சார்ந்த மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவில் பங்குகொண்ட கல்லூரி  முதல்வர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை ஈரோடு கலெக்டர்  சி. கதிரவன் வழங்கி பாராட்டினார்.


முகாமினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ். ஆறுமுகம், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர்  எஸ். நந்தகுமார்  பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர்  எஸ். திருமூர்த்தி ஆகியோர்  தனது பாராட்டுகளை தெரிவித்தார்கள்.  இம்முகாமில் ஈரோடு சுற்று பகுதிலுள்ள சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இலவச உடல் எடை, இரத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை அளவினை சரிபார்த்தல், ஆஸ்துமா, பக்கவாதம், குடல்புண், தைராய்டு கோளாறுகள், அஜிரண கோளாறுகள், தலைவலி, மூட்டு வலி, சிறுநீரக கோளாறுகள், எலும்பு தேய்மானங்கள் போன்ற நோய்களுக்கு இலவசமாக ஆலோசனைகளை பெற்று பயன் அடைந்தார்கள். மேலும் சிலருக்கு பல்வேறு குளியல்கள் அடங்கிய நீர் சிகிச்சைகள், காந்த சிகிச்சை, அக்கு பஞ்சர்  சிகிச்சை, பிஸியோதெராபி சிகிச்சை, யோகாவிலுள்ள பல்வேறு ஆசன பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டது. 



 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!