கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்தது : 3 பேர் பலி -9 பேர் படுகாயம்

மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமலஹாசன் நடிக்கும், இந்தியன்-2 படப்பிடிப்பு நாசரத்பேட்டை இ.வி.பி., பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் உள்பட 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.


இதற்காக பவர் கிரிட், கிரேன், லைட், செட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் திடீரென லைட் அமைக்கப்பட்டு இருந்த கிரேன் சரிந்தது. இதில் பலர் கிரேனின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர். 



இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா (வயது 34), உணவு வழங்குபவர்கள் மது, சந்திரசேகர் ஆகிய 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 


மேலும், 9 பேர் காயமடைந்து உள்ளனர். காயமைடந்த நபர்கள் தண்டலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ட்வீட்ட்டரிலும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.


இந்த விபத்தில் இயக்குனர் சங்கருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்