நெஞ்சம் பதற வைத்த வெடிவிபத்து - பட்டாசு ஆலை தரைமட்டம்: 2 பேர் பலி, 6 பேர் படுகாயம்

 


வீடியோ இதோ



 


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சின்னகாமன்பட்டி கிராமத்தில் சூரிய பிரபா என்ற பட்டாசு ஆலை உள்ளது.


இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20 பேர் பட்டாசு  தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.



இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் சூரிய பிரபா பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்து, தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் என அனைத்தும் வெடித்து சிதறின.


கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்ததால் பட்டாசுத் தொழிலாளர்கள் வெளியேறுவதற்குள் தாறுமாறாக பட்டாசுகள் வெடித்தன. இதில் வெடிமருந்து கிடங்கு, பட்டாசுகள் இருப்பு வைக்கும் கிடங்கு உட்பட மூன்று கிடங்குகள் இடிந்தன.


பட்டாசு வெடித்தது பெரிய விபத்து போல மூணு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த வெடிச்சத்தம் கேட்டது. தீயணைப்பு துறை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அவர்களுக்கு பொதுமக்களும் உதவி செய்தனர். வெடி விபத்தில் சிக்கிய 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக பலியாகினர். பட்டாசு விபத்தால் பட்டாசு குடோன்கள் இடிந்தும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தூக்கிவைத்து நீர் வீசப்பட்டும் இருந்தது. இதனால் அந்த பகுதியே போர்க்களமாக காணப்பட்டது. காயம் பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்தப் பை இந்த பட்டாசு விபத்தில் சிக்கிய மேலும் இருவரை தீயணைப்பு படையினர் தேடி வருகிறார்கள்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி