சொகுசு பஸ்கள் மோதியதில் 6 பேர் ரத்த வெள்ளத்தில் பலி: 20 பேர் படுகாயம்

 


சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகே  பெங்களூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.7 ல் சின்னநடுப்பட்டி பிரிவு பகுதியில்  நேபாளத்தை சேர்ந்த சுற்றுலா மினி பேருந்து கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்தது.



அப்போது சின்னநடுப்பட்டி காளியம்மன் கோவில் மண்டபத்தில் தங்குவதற்காக பேருந்தை திருஓட்டுநர் திருப்பி உள்ளார். அந்த நேரத்தில். பெங்களூரிலிருந்து கேரளா செல்வதற்காக வந்த ஆரஞ்சு என்ற தனியார் ஆம்னி சொகுசு பஸ் ,  சுற்றுலாபஸ்ஸின்  நடுப்பகுதியில் மோதியது.



பலத்த இந்த மோதலில் இரு பஸ்களில் இருந்தவர்களும் அலறினார்கள். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் உட்பட 6  பேர்  உயிரிழந்தனர். மேலும்  20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 




தொடர்ந்து விபத்து  நடந்த இடத்தில் சேலம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., தீபகணிக்கர், ஏ.எஸ்.பி.,  சுரேஸ்குமார் மற்றும் ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




விபத்து ஏற்பட்டதில் காரணமாக சுமார் 1மணி நேரத்துக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பின்பு சீர் செய்யப்பட்டது. விபத்து  தொடர்பாக ஓமலூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியானவர் விவரம் குறித்தும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்