என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பள்ளி மாணவர்களிடம் தீண்டாமை கடைப்பிடிக்கும் ஆசிரியை

சென்னையில்  தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களிகடம்  பிராமண தலைமையாசிரியை ஒருவர் தீண்டாமை கடைப்பிடிப்பதாக அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாற்றி வருகின்றனர். 



 


சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் உள்ள ஶ்ரீராம் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் மாணவர்களிடம் அப்பள்ளியின் தலைமையாசிரியை ராதா பத்மநாபன் என்பவர் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த  மாணவ மாணவிகளிடம் தீண்டாமை கடைப்பிடிப்பதாக தெரிய வருகிறது .



மாணவர்கள் உடல் நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தால் கூட அவர்கள் உண்ணும் உணவு முறையை கொச்சை படுத்தி பேசுவதாகவும் ஆதிதிராவிட மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்த வந்தால் பணத்தை ஜன்னல் வழியாக கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றும் மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் வந்தால் அவர்களை அலுவலகத்தில் உட்கார வைத்து பேசுவதாகவும் கூறப்படுகிறது.


இதானல் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு,மற்றும் பள்ளி கல்வி துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்