கிருமிநாசினி தெளிக்கும் திமுக எம்.எல்.ஏ., கணேசன்

திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர்  திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான 
சி.வெ கணேசன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார்.



கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிகுட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ கணேசன் தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார்.



இந்நிலையில் பொடையூர், ஆலம்பாடி மற்றும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஊராட்சிகளில் உள்ள கடை பகுதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, தேவாலயங்கள், கல்வி மையம், அரசு அலுவலகங்கள்,
  தெரு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான 
சி.வெ கணேசன் தொடர்ச்சியாக டாடா ஏசி வாகனம் உதவியுடன் ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி மருந்து தெளித்து வருகிறார்.


பின்னர் கொரோனா வைரஸ்  நோய்  பற்றிய விழிப்புணர்வும் அனைவரும் மாஸ்க் அணிந்தும் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.



இதில் வடக்கு ஒன்றிய கவுன்சிலர் கே.என். டி சுகுணா சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ஆலம்பாடி சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சி பாண்டியன், தொழிலதிபர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்