தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி& மீண்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

 


தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் தமிழகத்திலேயே தொற்றுக்கு உள்ளவானவர்கள் 2774. மீதமுள்ளவர்கள் வெளிமாநில வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள். 
இன்று மட்டும் 32079 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம் முடிவுகள் வெளி வந்துள்ளது. இதுவரை மொத்தமாக 9,76,431 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 33 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதுவரைக்கு 866 பேர்  கொரோனாவால் இறந்துள்ளனர்.
இதுரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  67468 பேர்.  இதில் 28,836 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று மட்டும் 2424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரைக்கும் 31,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முறை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களை சில  மண்டலமாக பிரித்து அந்த மண்டலத்திற்குள் இருக்கும் மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.ஆனால் தற்போது எல்லா மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட எல்லைகளை மூட அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மக்களுக்கு உரையாற்றினார். அப்போது தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும் ‘‘மண்டலத்திற்குள் போக்குவரத்துக்கு அனுமதி என்ற முறை நாளையில் இருந்து வருகிற 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்திற்குள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல அனுமதி வாங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்