உயிரிழந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென் மண்டல காவல்துறை சார்பாக நிதியுதவி

உயிரிழந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென் மண்டல காவல்துறை சார்பாக நிதியுதவி.

 


 

வீரமரணமடைந்த காவல்துறை வீரர்  சுப்பிரமணியன்  வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி எஸ். முருகன், நேரில் சென்று தென் மண்டல காவல்துறை சார்பாக ரூபாய் 86,50,000/- நிதியுதவி வழங்கினார்.

 

கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன்  வீர மரணமடைந்தார்.

 


 

அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக நிதியுதவி  வழங்க மதுரை தென் மண்டல ஐ.ஜி முருகன், அறிவுறுத்தலின்படி, தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள்  விருப்பத்திற்கேற்ப நிதியுதவி பங்களிப்பு செய்துள்ளனர்.

 

அந்த பங்களிப்பு ரூபாய் 86,50,000/-த்தை இன்று (31.08.2020) மதுரை தென் மண்டல ஐ.ஜி எஸ். முருகன் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டார விளையில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். 

 


 

அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்  மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இருப்பினும் அவர் மறைந்தாலும் அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றென்றைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும். 

 

அவரை இழந்த தங்கள் குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்