பல்லாவரம் அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் கணக்கில் வரத 44 லட்சம் ரூபாய் பறிமுதல்

பல்லாவரம் அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் இரண்டு வாகனங்களில் கணக்கில் வரத 44 லட்சம் ரூபாய் பறிமுதல், பல்லாவரம் தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் ஆலந்தூர் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது


சட்டமன்ற தேர்தலை ஒட்டி பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்ப்ஹ் குழுவினர் பணம், பரிசு பொருட்கள் கடத்தல் சம்மந்தமாகவும், தேர்தல் விதிமீறல்கள் நடவடிக்கை எடுக்க தொகுதிவாரியாக  சுற்றிவரும் நிலையில் சென்னை அடுத்த பல்லாவரம் தொகுதி திருநீர்மலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி ஜார்ஜ் அடுத்து அடுத்து இரு வாகனங்களை சோதனை செய்ததில் தனியார் ஏஜென்சியாக செயல் பட்டு பல்வேறு ஏ.டி.எம் களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வாகனம் என தெரிய வந்தது அதில் இருந்த கட்டுக்கட்டாண பணத்தை கைப்பற்றி பல்லாவரம் தேர்தல் அதிகாரி முன்பாக திறந்து பார்தபோது ஒரு வாகனத்தில் 40 லட்சமும், மற்றொரு வாகனத்தில் 4 லட்சம் என இரண்டு வாகனத்திலும் சேர்த்து 44 லட்சம் பணத்திற்காக முறையான ஆவனங்கள் இல்லை என கூறி பல்லாவரம் தேர்தல் அதிகாரி லலிதா உத்திரவின்பேரில் பம்மலில் உள்ள ஆலந்தூர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.


ஒரே நேரத்தில் இரு வாகனத்தில் 44 லட்சம் பிடிபட்டது தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்