தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை - கனிமொழி எம்.பி.!


தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தூத்துக்குடியில் இது வரை 2 இலட்சத்து 90 ஆயிரம் நபருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் உள்பட அனைத்து துறையினரும் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவடையும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது

இரவு நேர விமான சேவைக்கு மின்விளக்கு அமைக்கப்பட்டு வந்த பணி நிறைவடைந்து விட்டது.  இதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது. விரைவில் இரவு நேரத்தில் விமான சேவையைத் தொடங்கும்  என்றாா்.

நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி