பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் வசதி.!


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 100வது ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி உட்பட 4 ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டது. 

இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும்  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூறாவது ஆண்டை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12 முதல் தூத்துக்குடி, கோவில்பட்டி, மானாமதுரை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் புதிய ஏடிஎம் மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் சேவை மூலம் வங்கி வசதிகளை 24 மணி நேரமும் மக்கள் பயன் பெரும் பொருட்டு மொத்தம் 1397 ஏடிஎம் / பணம் செலுத்தும் இயந்திரம் மற்றும் E-Lobby போன்ற வசதிகளை செயல்படுத்தப்பட்டுள்ளது. 

நூறாண்டுகளாய் தொடர்ந்து பேராதரவு தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்