தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம் - கனிமொழி எம்.பி பேட்டி.!


தூத்துக்குடி சிதம்பர நகர் வஉசி கல்விக்கழக நடுநிலைப்பள்ளியில் எஸ்.இ.பி.சி. பவர் பிரைவேட் லிமிடெட் சமூக பொறுப்பு நிதி ரூ.17.40 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது 

நிகழ்ச்சிக்கு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி "தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம்.

டெல்லி செல்லும் போது இதை நான் வலியுறுத்துவேன். முதலில் நிலம் வாங்கி கொடுத்த பிறகு தான் அவா்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டே இருக்கிறது எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் எஸ்.இ.பி.சி. பவர் பிரைவேட் லிமிடெட் துணைத்தலைவர் ஆர்.குமார், பொது மேலாளர் ரமேஷ், மனித வள மேலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி