தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை - எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை.!


தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யார், யார் என கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில்  காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குனர்  ரவுடிகள், கூலிப்படையினர், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அவர்கள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


கடந்த 6 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் 70 பேர் உட்பட 96 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 பேர் கைது செய்யப்பட்டு, 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 763 வழக்குகள் பதிவு செய்து 773 பேர் கைது செய்யப்பட்டு, 72000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கூலிப்படையினர், ரவுடித்தனம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன், 

காவல்துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொன்னரசு, மணியாச்சி சங்கர், விளாத்திக்குளம் பிரகாஷ், கோவில்பட்டி உதயசூரியன், திருச்செந்தூர் பொறுப்பு பாலாஜி, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!