ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் வரும் 31ஆம் தேதிக்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் - தலிபான் எச்சரிக்கை.!


அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார்.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடையே அவநம்பிக்கையையே ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதே நேரம் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அனைத்து அமெரிக்கர்களையும் 31ஆம் தேதிக்குள் வெளியேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேல் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்ஸன் அழைப்பு விடுத்துள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்