கள்ளக்குறிச்சி அருகே அரசுப்பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு; பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!


சென்னை தாம்பரம் பகுதியை வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் PY01CV3123 என்ற எண்ணுள்ள Xuv500 மகிழுந்தில் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்றுள்ளனர்.

சுற்றுலா முடிந்து வீட்டிற்கு அனைவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இன்று இரவு 7.30  மணியளவில் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்களம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த TN30N2045 என்ற எண்ணுள்ள அரசு பேருந்து - மகிழுந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் மகிழுந்தில் பயணித்த அனைவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, தியாகதுருகம் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, காரில் பயணித்த மகிழுந்து ஓட்டுநர் உட்பட 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. அரசு பேருந்தில் பயணித்த சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தியாகதுருகம் காவலர்கள் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!