தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம்.!


தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 

திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நாளையும், நாளை மறுதினமும், தேனி, நீலகிரி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், காஞ்சிபுரம், வேம்பாக்கம் மற்றும் ஆரணியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!