இரண்டரை வயதில் சூப்பர் ஐ.க்யூ! ’இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பக்கத்தில் இடம் பெற்ற சுட்டி!


திருப்பூர் விகாசினி மெட்ரிக் பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவரான ஆனந்தபாபுவின் மகன் விவேகானந்தன். இரண்டரை வயதாகும் இந்தச் சுட்டி, பழங்கள், காய்கறிகள், விலங்குகள், பறவைகள், வடிவங்கள், நிறங்கள், பறவைகள் மற்றும் வனவாழ் உயிரினங்களின் சப்தங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களின் பெயர்கள், 

வார நாட்களின் கிழமைப் பெயர்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), தேசத்தலைவர்களின் பெயர்கள், 10 தமிழ் பாடல்கள், 10  ஆங்கில பாடல்கள் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்து சட்டென கூறுவாராம்.

அவரது இச்சாதனை ‘இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அவரின் இந்த ஐ.க்யூ திறனைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.  

இந்தச் சுட்டியின் திறனைக் கண்டு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்