தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி மது விற்பனைக்கு தடை ஆட்சியர் உத்தரவு.!


தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி 

அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள்  அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்நதப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்