விளாத்திகுளத்தில் பதுக்கி வைத்து புகையிலை விற்பனை - 3 பேர் கைது


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  தலைமையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி விளாத்திகுளம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள செல்வம் (49) என்பவருக்கு சொந்தமான AMS மளிகை கடையை  சோதனை செய்த போது அதில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து 

18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது  தெரியவந்தது. அவர் வைத்திருந்த பைகளில் ரூபாய் 18,000/- மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும்,

அதனை குழந்தைகளுக்கு விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் சூரிய நாராயண ராஜா (42), மற்றும் ராஜகுரு மகன் கணேசன் (47) ஆகிய 3  எதிரியையும் கைது செய்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்