பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு அரசு பணி நியமன ஆணை- எஸ்.பி.ஜெயக்குமார் வழங்கல்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. 

அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. 

அரசு பணியாணையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.

மேற்படி பணியாணையை தமிழக காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் மகள் சூரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் மகன் சொரிமுத்து அய்யனார், சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி மகன் சுரேஷ் ராஜா, 

தலைமை காவலர் சசிக்குமார் மகள் அட்சயா, காவலர் நவமணி ரத்தினரோச் சகோதரர் ஜஸ்டின் செல்வமணி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட காவல்துறை அலவலக நிர்வாக அலுவலர் சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்  நம்பிராஜன் மற்றும் உதவியாளர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்