பாஜக ஆளும் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் - எஸ்டிபிஐ கண்டன ஆர்பாட்டம்!



பாஜக ஆளும் திரிபுராவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் எஸ்டிபிஐ  கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட வன்முறை தாக்குதலை கண்டித்தும் கலவரத்தை தடுக்காத திரிபுரா பாஜக அரசை கண்டித்தும் எஸ்டிபிஐ   கட்சி சார்பில் தூத்துக்குடி  பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தூத்துக்குடி தொகுதி தலைவர் காதர் ஹுசைன் தலைமை தாங்கினார். மீனவர் அணி தலைவர் கெளது முஹைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சம்சு மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைதீன் கனி வரவேற்புரை வழங்கினார்.  எஸ்டிபிஐ  மாவட்ட பொதுச் செயலாளர் காதர் முஹைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அ.அப்துல்காதர், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சே.மா.சந்தனராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்டசெயலாளர் தாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி வடக்கு மாவட்ட செயளாலர் கிதர் பிஸ்மி,

 தமுமுக மாவட்டசெயலாளர் ஹசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.இறுதியாக தூத்துக்குடி  தொகுதி செயலாளர் ஷேக் முஹைதீன் அலி நன்றியுரை ஆற்றினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!