தூத்துக்குடியில் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!

தூத்துக்குடியில் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!



தூத்துக்குடி பண்டுகரை பகுதியில் இயற்கை இன்னல்கள் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்தின் காரணமாக வீடுகள் சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகளை  சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார்.

பின்னர் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி வட்டம் பண்டுகரை பகுதியில் தீ விபத்தின் காரணமாக சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு குடிசை வீடு சேதம் அடைந்த நபர்களுக்கு நிவாரண உதவி வழங்கிட உத்தரவிடப்பட்டது. 

அதன் அடிப்படையில் இன்றைய தினம் குடிசை வீடு முழுவதும் சேதம் அடைந்த நபர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகையும்இ குடிசை வீடு பகுதி சேதம் அடைந்த நபர்களுக்கு ரூ.4100 என மொத்தம் 7 நபர்களுக்கு ரூ.33200 க்கான நிவாரண உதவித்தொகை அரிசி, பருப்பு மற்றும் உடை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிசை வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடு உள்ளிட்டவை வழங்க உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், முக்கிய பிரமுகர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்