அய்யனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரி காளியப்பன் பதவி ஏற்பு.!*
தமிழகம் முழுவதும் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டன.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரி காளியப்பன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 9 பேர் பதவி ஏற்றனர்.இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி மத்திய பகுதி மதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன்,மதிமுக முன்னாள் கவுன்சிலர் தெய்வேந்திரன், மற்றும் குருவி குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அனைத்து சமுதாயப் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.