ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு பயிற்சி- கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்கள்.!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் யங் இந்தியன் மற்றும் யூனிஸ்ப் இணைந்து நடத்தும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி கூட்டம் தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது
பயிற்சிப் பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் (சென்னை) வளர்மதி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான பயிற்சி பட்டறை தொடங்கி வைத்தார்கள்.
விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி, குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் குமரேசன், யங் இந்தியன்ஸ் தலைவர் பொன்குமரன், தோழமை அமைப்பு இயக்குநர் ஜான் சுரேஷ், மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.