தீபாவளியை முன்னிட்டு கோவில்பட்டி கண் தான இயக்கம் சார்பில் விழி இழந்தோருக்கு நலத்திட்ட உதவி.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சிசி திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கண் தான இயக்கம் சார்பில் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தலைமையில் 100 விழி இழந்தோருக்கு தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உதவித் தலைவர் ஜெயராஜ், ராஜவேல், நாகராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர் எஸ் ரமேஷ், ரோட்டரி சங்கம் ரவி மாணிக்கம், ஏசியா பார்ம்ஸ் பாபு, செந்தில்குமார் கண்ணன், ரத்தினகுமார், பிரவீன், பிரசன்னா எம்எஸ்வி பாபு, சுரேஷ்
அப்துல்கலாம் ரத்ததான கழக தலைவர் ராஜேந்திரன், அப்துல்கலாம் ரத்ததான கழக செயலாளர் டீக்கடை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.