மரக்காணம் அருகில் உள்ள கடப்பாக்கத்தில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வுசெய்தார். சத்துணவு தயாரிக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் அன்மையில் தேனி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நவீன் பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடம் இன்று தமிழ் அஞ்சல் நாளிதழின் தொழில் மலரை, தூத்துக்குடி மாவட்ட தமிழ் அஞ்சல் நாளிதழின் புகைப்பட சித்திக் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் இன்று உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் காலை முதலே,போராட்டத்திற்கு ஆதரவாக, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் களை போலீசார் கைது செய்தனர். புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் ,மழை நீர் ஓடையின் குறுக்கே,, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், மந்தை நிலத்தை ஆக்கிரமித்து. வணிக வளாகமும் கட்டுவதை கண்டித்தும், நகராட்சி பகுதி 16 வது வார்டில், சந்தை வளாகத்தில், கொட்டப்பட்டுள்ள, குப்பை மேட்டை அகற்ற, நகர மன்ற உறுப்பினரும் , பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனு அளித்து போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், புளியம்பட்டி கோயில் புதூர் வண்டிப் பாதையை, சீரமைத்ததாக பொய் சொல்லும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சொத்து வரி,,தொழில் வரி,குப்பை வரி ஆகியவற்றை பலமடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,. வாரச்சந்தை தினசரி மார்க்கெட் கடைகளை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதை கண்டிப்ப...
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை அமைச்சராகவும் இருந்தவர். அவர் மனம் திறந்து பேசப்போவதாக கூறியதை அடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு கட்சிகளுக்கு செல்லப்போவதாகவும், ஒருங்கிணைந்த அதிமுக பற்றி பேசப்போவதாகவும் பல்வேறு பேச்சுகள் நிலவின. இந்த நிலையில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘1972 ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொட்ங்கினார். 1973ல் அதிமுக சார்பில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்ட போது மாபெரும் வெற்றி பெற்றார். கோவையில் அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், அரங்கநாயகம் தலைவர், திருப்பூர் மணி மாறன் செயலாளர், என்னை பொருளாளராக நியமித்து இருந்தார். நாங்கள் முழுமையாக நின்று செயல்படுத்தி எம்.ஜி.ஆரை அழைத்து சென்றபோது, மகிழ்ச்சி தெரிவித்தார். 1977ல் நான் கோபியில் போட்டியிடுற போது, சத்தியமங்கலத்தில் என்னை எம்.ஜி.ஆர் நிற்க சொன்னார். அங்கு எனக்கு புதிய இடம் என்று கூறினேன், தனது பெயரை உச்சரிக்க சொன்னார்....