சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20,000 குடும்பங்கள் தவிப்பு

பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு முழுவதும் சூழ்ந்த மழை நீர் 20000 குடும்பங்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.


சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு முழுவதுமாக மழை நீரால் சூழப்பட்டுள்ளது. 3 நாட்களாக மின் இணைப்பும் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். 

அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத சூழ்நிலையில் சிலர் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் வெளியில் நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

டிராக்டர் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிநீர் விநியோகம் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படுகிறது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்