பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம்

 


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து  திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம் இன்று நடைபெற்றது.  

திருப்பூர் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், பாண்டியன் நகர் பகுதியில் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது. 
இந்த பிரச்சாரத்துக்கு  திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சேர்மன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  துணைத் தலைவர் ராமசாமி, மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர் தீபிகா அப்புகுட்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சகாயமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக வீடு வீடாக சென்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்கள். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்