தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.!


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று  நடைபெற்றது. 

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். 

மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மற்றும் நீண்ட நாள் மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்களை வழங்கினார். 

கூட்டத்தில மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர்  வீரபத்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்