மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முறையில் விமானத்திற்குள் உயிரிழப்பு

மதுரையிலிருந்து சென்னை வழியாக   மும்பை செல்லும் ஏா்இந்தியா  விமானத்தில்  மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முறையில் விமானத்திற்குள்  உயிரிழப்பு.சென்னை விமானநிலையத்தில் போலீசாா் உடலை கைப்பற்றி விசாரணை.இதனால் மும்பை செல்லும் விமானம் 2 மணி நேரம் தாமதம்.

மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து மதுரை செல்வேண்டிய ஏா்இந்தியா விமானம் இன்று பிற்பகல் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.விமானத்தில் முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கினைப்பாளருமான O.பன்னீா்செல்வம் உட்பட 93 பயணிகள் இருந்தனா்.

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு  விமானம் சென்னை விமானநிலையத்திற்கு வந்து தரையிறங்கியது.சென்னை பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து  இறங்கினா். ஆனால் ஒரு பயணி மட்டும் விமானத்திலிருந்து இறங்கவில்லை.இதையடுத்து ஏா்இந்தியா ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி பாா்த்தபோது,மதுரையை சோ்ந்த சண்முக சுந்தரம் (72) என்ற பயணி அவருடைய இருக்கையில் சாய்ந்து தூங்குவதுபோல் இருந்தாா்.ஊழியா்கள் எழுப்பியபோது,சுயநினைவு இல்லாமல் இருந்தாா்.

இதையடுத்து விமானநிலைய மருத்துவ குழுவினா் விமானத்திற்குள் ஏறி,பரிசோதித்தபோது,அவா் உயிரிழந்தநிலையில் இருந்தது தெரியவந்தது.உடனடியாக சென்னை விமானநிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசாா் விரைந்து வந்து உடலை விமானத்திலிருந்து கீழே இறக்கி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அதோடு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று போலீசாா்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

இதற்கிடையே இந்த விமானம் இன்று மாலை 3 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு செல்ல வேண்டும்.அந்த விமானத்தில் 115 போ் பயணிக்க இருந்தனா்.ஆனால் பயணி ஒருவா் விமானத்திற்குள்ளேயே உயிரிழந்துவிட்டதால்,விமானத்தை மும்பைக்கு இயக்க விமானி மறுத்துவிட்டாா்.இதையடுத்து விமானம் முழுமையாக கிருமிநாசினி மருந்து ஸ்பிரே அடித்து சுத்தம் செய்யப்பட்டது.அதன்பின்பு 115 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனா்.விமானம் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு சென்றது.

இதனால் சென்னை விமானநிலையத்தில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!